பெரிய தம்பி இறந்து விட்டதால், நிலத்தை விற்ற பொன்னுசாமி அவரே மீண்டும் 24/2/2014 ஆண்டு அதே கிராமத்தில் வசிக்கும் வெங்கடேசன், திருப்பதி ஆகியோர்களுக்கு போலியான ஆவணம் தயாரித்து மொரப்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரையம் செய்து கொடுத்துள்ளார். கடந்த மாதம் வெங்கடேசன் அவர்கள் ராமக்காள் வசித்து வந்த வீட்டை இந்த இடம் எனக்குத்தான் சொந்தம், இந்த இடத்தை நான் வாங்கி விட்டேன் என்று கூறி வீட்டை இடித்து விட்டு வீட்டிலிருந்த பொருட்கள் எல்லாம் தூக்கி எறிந்து விட்டு வயதான ராமக்காளை அங்கிருந்து விரட்டிவிட்டார்.
இதனால் தங்குமிடமில்லாமல் பக்கத்தில் அமைந்துள்ள சர்ச்சில் தன் தஞ்சம் புகுந்துள்ளார். அதனால் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன் போலியான பத்திரம் மூலம் சொத்தை கிரையம் செய்து தன் நிலத்தை மோசடி செய்து அபகரித்துக் கொண்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தன் சொத்தை மீட்டுத் தர வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.