நிகழ்ச்சியில் பாலக்கோடு அரிமா சங்க தலைவராக ஸ்ரீதர், வட்டார தலைவராக கேசவராஜ், செயலாளராக சக்திவேல், ராஜா, மணி, பொருளாளர் முத்து ஆகியோருக்கு பன்னாட்டு அரிமா சங்க இயக்குனர் தனபாலன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாலக்கோடு தூய்மை பணியாளர்கள் 85 நபர்களுக்கு புடவையும், மற்றும் பாலக்கோடு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் செல்வராஜ், சந்திரசேகரன், சுப்பிரமணியன், ரவிவர்மா, பொன்னுச்சாமி, மோதிலால், தருமன், முன்னாள் பொருளாளர் சரவணன் உள்ளிட்ட அரிம சங்க முன்னாள் முக்கிய நிர்வாகிகள், தொழில் அதிபர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.