தர்மபுரி: தர்மபுரியில் தேசிய ஒற்றுமை விழிப்புணர்வு பேரணி

இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மை பாரத் கேந்திரங்கள் மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்தநாளையொட்டி தேசிய ஒற்றுமை பாதயாத்திரை நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில், மை பாரத் மற்றும் தனியார் மகளிர் கல்லூரி இணைந்து இன்று செவ்வாய்க்கிழமை தேசிய ஒற்றுமை விழிப்புணர்வு பேரணியை துணை காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கி 4 ரோடு வரை சென்று நிறைவடைந்தது.

தொடர்புடைய செய்தி