தர்மபுரி: விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய எம்பி

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் நாகாவதி அணை பகுதியில் இன்று காலை அரசு பேருந்தும் நல்ல முறையில் செயல்பட்டு வரும் தனியார் மகளிர் கலை அறிவியல் கல்லூரி பேருந்தும் குறுக்கு சாலையில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் கல்லூரி பேருந்து அரசு பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்த மாணவிகள் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இது குறித்த தகவல் அறிந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மாணவிகளை திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் மணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சிறப்பான சிகிச்சை வழங்க மருத்துவர்களிடம் வலியுறுத்தினார். உடன் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் ஏ எஸ் சண்முகம் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி