பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன், ஆறாவது முறையாக தன்னை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க பிக்கனஅள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு சென்றிருந்தார். அப்போது, அப்பகுதி மக்கள் ஒகேனக்கல் குடிநீர் பிரச்சினை குறித்து அவரிடம் தெரிவித்தனர். உடனடியாக அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அன்பழகன், குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுத்தார். இதனால் மகிழ்ந்த அப்பகுதி மக்கள் அவருக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.