அப்போது சின்னசாமி மருத்துவமனைக்குள் இருந்த மனைவி மற்றும் உடமைகளை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது காவலாளிகள் அவரிடம் பணம் கேட்டுத் தொந்தரவு செய்துள்ளனர். இதனால் இருவரும் தகராறு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து இன்று நேரில் சென்ற தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட அவரது கணவரைத் தாக்கிய காவலர்கள் குறித்துக் கேட்டறிந்தார். மருத்துவமனையில் நோயாளிகளின் சிகிச்சை குறித்தும், மருத்துவமனையில் வழங்கும் உணவுகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் தாக்குதல் நடத்திய காவலாளிகளைப் பணிநீக்கம் செய்ய உள்ளிருப்பு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்