இந்த போட்டியானது நேற்று வெள்ளிக்கிழமை முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதில் தர்மபுரி, சென்னை, கோயம்புத்தூர், திருப்பத்தூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். போட்டியின் தொடக்க விழாவை முன்னிட்டு விளையாட்டு வீரர்களுக்கு வீரர்களின் அணிவகுப்பு வித்யா மந்திர் பள்ளியில் தொடங்கி காவல் நிலையம், பேருந்து நிலையம் வழியாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முடிவு பெற்றது.
விளையாட்டு போட்டிகளை டிஎஸ்பி மனோகரன், முன்னாள் மூத்த விளையாட்டு வீரர் வெங்கட்ராமன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் காவல் ஆய்வாளர் பாலசுந்தரம், உதவி காவல் ஆய்வாளர் கோகுல், நண்பர்கள் கைப்பந்து குழு தலைவர் மகேந்திரன், செயலாளர் சரவணன், முன்னாள் நண்பர்கள் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர் என குறிப்பிடத்தக்கது.