தர்மபுரி: மாரியம்மன் கோவில் திருவிழா பந்தகால் நடும் விழா

பாலக்கோட்டில் உள்ள ஸ்ரீபுதுர் மாரியம்மன் கோவில் திருவிழா, 12 கிராம பொதுமக்கள் மற்றும் அனைத்து சமூகத்தினரின் இணைந்த விமர்சையான கொண்டாட்டத்துடன் இன்று சனிக்கிழமை பந்தகால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், பூந்தோரணம் கட்டி, மஞ்சள் குங்குமம் வைத்து, பால், தீர்த்தமிட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. தொடர்ந்து மேளதாளம் முழங்க பந்தகால் நடப்பட்டது. இதில் ஊர் முக்கிய பிரமுகர்கள், நற்பணிமன்ற நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி