தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டில் பாலம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த சொன்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ் (52) என்பவர், இன்று வியாழக்கிழமை விடியற்காலையில் கட்டுமானப் பணியில் இருந்த குழியில் தவறி விழுந்து கம்பிகளில் குத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து காரிமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.