மாரண்டஅள்ளி உதவி காவல் ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆத்துக் கோட்டை கரகூர் சாலையில் சந்தேகத்திற்கிடமான இருசக்கர வாகனத்தில் வந்த செல்வகுமார் என்பவரை தடுத்து நிறுத்தினர். விசாரணையில், அவர் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 39,130 ஆகும். இதையடுத்து, பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (வயது 40) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து மதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.