தர்மபுரி: வீட்டுக்குள் திருட முயன்ற நபர் கைது

காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி ஆற்றுப்பாலம் பகுதியை சேர்ந்த அபார் அகமத் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றார். வியாழக்கிழமை அதிகாலை மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் வருவதைக் கண்டதும் தப்பிக்க முயன்ற அவரை மடக்கிப் பிடித்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், ஓமலூரைச் சேர்ந்த பிரபு என்பது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி