தர்மபுரி: ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவர் கைது

தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர் கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த  பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் விரைந்து வந்து அந்த நபர் தீக்குளிக்கும் முயற்சியை முயற்சியை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர் அரூர் அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கண்ணன் என்பது தெரியவந்தது. தனது தாத்தாவின் நிலத்தில் தனக் குரிய பங்கை வழங்க உறவினர்கள் சிலர் மறுத்து வருவதாகவும், தனக்கு சேர வேண்டிய பங்கை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று மாலை கண்ணனை தர்மபுரி நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவலர்கள் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி