தர்மபுரி: குள்ளனூர் மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு ஊர்வலம்

தர்மபுரி குள்ளனூரில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் மாரியம்மன் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி பந்தக்கால் நடப்பட்டு, சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. ஊர் பொதுமக்கள், பெண்கள், ஆண்கள் காப்பு கட்டி விழாவில் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நாளான நேற்று வெள்ளிக்கிழமை, சக்தி மாரியம்மன் கோவிலில் தொடங்கி, குள்ளனூர் முக்கிய வீதி, பனந்தோப்பு கொட்டாய், ஹவுசிங் போர்டு வழியாக தாரை தப்பட்டை, கரகாட்டம், வான வேடிக்கையுடன் மாவிளக்கு ஊர்வலம் பட்டாளம்மன் கோவிலில் வந்தடைந்தது. அங்கு மாவிளக்கு வைத்து பூஜை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி