தர்மபுரி: கேரளா நடிகர் தந்தை விபத்தில் உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இன்று (ஜூன் 6) காலை 6 மணியளவில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த போதைப்பொருள் மற்றும் நடிகைக்கு இடையூறு போன்ற விவகாரங்களில் சிக்கிய மலையாள நடிகர் ஷைன் டோம் சாக்கோ தனது தந்தையின் சிகிச்சைக்குக் குடும்பத்துடன் காரில் பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். 

அப்போது தர்மபுரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலக்கோடு அருகே முன்னால் சென்றுகொண்டிருந்த சரக்கு லாரி மீது இவர்களது கார் பின்புறமாக மோதி விபத்தில் படுகாயம் அடைந்தார். அவரது தந்தை சி.பி. சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தாயார் மரியா கார்மல் படுகாயம் அடைந்தனர். 

உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற போலிசார் இவர்களை மீட்டு சிகிச்சைக்குத் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிரசிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்துபோன தந்தை சி.பி. சாக்கோவின் உடல் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி