தர்மபுரி: தோட்டக்கலை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நல சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் மற்றும் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்று, தோட்டக்கலை அலுவலர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விளக்கவுரையாற்றினர். மாவட்ட அளவிலான அனைத்து நிலை தோட்டக்கலை அலுவலர்களும் இதில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி