தர்மபுரி: மாவட்டத்தில் பல இடங்களில் இடி மின்னலுடன் கனமழை

தமிழகத்தில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் கனமழையும் ஒரு சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டுள்ள நிலையில் வெப்பம் அதிகரித்திருந்தது. 

இதனை அடுத்து ஏப்ரல் 16 இன்று விடியற்காலை 2.30 மணி முதல் தர்மபுரி, நல்லம்பள்ளி, தொப்பூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. காலை 6 மணி நிலவரப்படி பல்வேறு பகுதிகளில் இடைவிடாத கனமழை பொழிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி