தர்மபுரி: காட்டு யானைகள் நடமாட்டம் வனத்துறையினர் எச்சரிக்கை

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள ஊடேதுர்கம் காட்டிலிருந்து மூன்று காட்டு யானைகள் நேற்று சனிக்கிழமை காலை வெளியே வந்து சூடானுர் அருகே உள்ள காட்டில் முகாமிட்டுள்ளன. இதனால், பாலக்கோடு வன சரக ஊழியர்கள் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரங்களில் சூடானூர், பாலப்பனஅள்ளி, கிட்டம்பட்டி, சின்னேகவுண்டன அள்ளி, தண்டே குப்பம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி