இது குறித்து தகவல் அறிந்து பாலக்கோடு வனத்துறையினர் வனச்சரக அலுவலர் நடராஜ் தலைமையில் நேற்று முதல் எருதுகூடாள்ளி பகுதியில் யானை நடமாட்டங்களை கண்காணித்தனர். அங்கு மூன்று காட்டு யானைகள் அப்பகுதிகளின் விவசாய நிலங்களில் சுற்றித் திரிந்தன. இதனை கண்டு வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகளை காப்புக்காட்டில் துரத்தி விட்டனர்.
மேலும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காட்டுக்குள் விரட்டப்பட்ட யானைகள் காப்புக்காட்டின் அருகாமையில் உள்ள கிராமங்களில் செங்கோடபட்டி, கணவனாள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் வர வாய்ப்புள்ளதால், இன்று (மே 9) காலை செங்கோடபட்டியில் வனத்துறை சார்பாக இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், யானை நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.