இந்த நிலையில் இன்று (ஜூன் 12) தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதிக்கு உட்பட்ட சோமனஹள்ளி ஏரியில் பாலக்கோடு தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறையினர் இணைந்து விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பாலக்கோடு வட்டாட்சியர் ரஜினி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் முனிராஜ், சின்னசாமி, தீயணைப்பு நிலைய சிறப்பு நிலை அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தென்மேற்கு பருவமழையின்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் சிக்கிக்கொண்டால் எவ்வாறு தற்காத்துக்கொள்வது, பின்னர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் மற்றும் மனிதர்கள் சிக்கிக்கொண்டால் எப்படி தப்பிப்பது, உடனிருப்பவர்கள் சிக்கிக்கொண்டால் அவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து பல்வேறு சிகிச்சை முறைகள் குறித்து ஒத்திகை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.