சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இந்த விபத்து மளமளவென பரவி இரண்டு தொழிற்சாலைகளிலும் பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக காவலர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில் காவலர்களும் தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் மற்ற கடைகளுக்கு தீ பராமல் தடுக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்பு துறை வீரர்கள் இந்த விபத்தில் மரம் அறுக்கும் மில்லில் இருந்து இயந்திரங்கள், தேக்கு மரங்கள், சோபா தயாரிக்க பயன்படும் பஞ்சு உள்ளிட்ட பொருட்கள் என ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து காரிமங்கலம் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு