தர்மபுரி: தக்காளி விலை சரிவு விவசாயிகள் கவலை

தர்மபுரி மாவட்டத்தில் 15,000 ஹெக்டேர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சீதோசன நிலை காரணமாக வரத்து அதிகரித்து, ஒரு கிலோ தக்காளி 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. உழவர் சந்தையில் ரூ. 8, வெளி மார்க்கெட்டில் ரூ. 10 என விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் உற்பத்தி செலவை கூட ஈட்ட முடியாததால், செடிகளிலேயே தக்காளிகளை அழுக விடும் அவலம் ஏற்பட்டுள்ளது. அடிப்படை ஆதார விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி