தர்மபுரி: தமிழக முதல்வர் பிறந்த நாள் கொண்டாடிய திமுகவினர்

தமிழ்நாடு முதலமைச்சர் முக. ஸ்டாலின் 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திமுக தர்மபுரி மேற்கு மாவட்டம் சார்பாக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும் தற்போதைய திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான பி. பழனியப்பன் தலைமையில் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் பல்வேறு பகுதிகளில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜிட்டண்டா அள்ளி கிராமத்தில் தூய்மை பணியாளர் மற்றும் ஏழை எளியோருக்கு உணவு மற்றும் வேட்டி, புடவை வழங்கி முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் முதல்வர் பிறந்த நாளை கொண்டாடினர். இந்த நிகழ்வில் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து ஒன்று சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி