பிரபல நடிகரும் தேசிய முன்னேற்ற திராவிடர் கழகத்தின் நிறுவனர் விஜயகாந்த் இளைய மகன் நடித்த படைத்தலைவன் திரைப்படம் நேற்று ஜூன் 13 தமிழகம் முழுவதும் வெளியானது. இதனை அடுத்து தர்மபுரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி அருகாமையில் அமைந்துள்ள ஜி எம் திரையரங்க வளாகத்தில் தேமுதிக மாநில அவைத்தலைவர் மருத்துவர் இளங்கோவன், தெற்கு ஒன்றிய துணை செயலாளர் அசோக்குமார் மற்றும் தர்மபுரி மாவட்டச் செயலாளர் குமார் ஆகியோர் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் தர்மபுரி மாவட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் திரைப்படம் பார்க்க வந்த பொதுமக்களுக்கும் இனிப்பு மற்றும் கேக்குகளை வழங்கினர்.