பாலக்கோடு தொகுதியின் 120 ஏக்கர் தூள்செட்டி ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அழியாளம் அணைக்கட்டில் இருந்து உபரி நீரை கொண்டு வரவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, மாவட்ட ஆட்சியர் சதீஷ் தூள்செட்டி ஏரிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஏரி ஆக்கிரமிப்பு அகற்றுதல், ஏரிக்கரையை பலப்படுத்துதல், மழை நீரை சேகரித்தல், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் அனைத்து பணிகளும் முன்னெடுக்க வேண்டுமென பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.