இவர்கள் பள்ளிக்காலத்திலிருந்து காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து காதல் ஜோடியினர் கடந்த 6ஆம் தேதி சேலத்தில் சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு நண்பரின் வீட்டில் தங்கி இருந்தனர். திரிஷாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் இன்று இருவரும் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இருவரின் பெற்றோரும் காவல் நிலையத்திற்கு வந்தனர். திரிஷாவின் பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்கவில்லை. ஆனால் திரிஷா காதல் கணவன் சேரன் உடன் தான் செல்வேன் என கூறியதால் காவலர்கள் காதலனுடன் காதலியை அனுப்பி வைத்தனர். காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் அப்பகுதியை பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
நெல்லையப்பர் கோயில் தேர் ஓடும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு