தருமபுரி: இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தருமபுரியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை தொடர்ந்து அமலாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பாசிச பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாதையன், அலமேலு, ரவி, பாலன் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மோடி அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி