தர்மபுரி: பாலக்கோடு வட்டார பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆய்வு

தர்மபுரி மாவட்டம், தருமபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் தர்மபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் நடைபெற்ற பள்ளி வாகனங்கள் ஆய்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ், நேற்று (மே 10) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பள்ளி வாகனங்களை சரிவர பராமரிக்கப்படாத 2 பள்ளி வாகனங்களுக்கு ரூ. 1000/- அபராதமும், ஓட்டுநர் உரிமம் இல்லாத மற்றும் அவசர கால வழிகளை சரிவர பராமரிக்காத பள்ளி வாகன ஓட்டுநருக்கு ரூ. 5000/- வரை அபராதமும், முதலுதவி பெட்டிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 10 பள்ளி வாகனங்களுக்கு ரூ. 100/- அபராதமும் மாவட்ட ஆட்சித்தலைவர் விதித்தார். 

மேலும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி வாகனங்களில் அரசின் அனைத்து விதிமுறைகளும் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை உரிய முறையில் ஆய்வு செய்திட வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தினார்கள். உடன் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி