தர்மபுரி: காரிமங்கலத்தில் 16 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் திங்கள் தோறும் நடைபெறும் சிறப்பு வார சந்தையில் நேற்று விவசாயிகள், வியாபாரிகள் ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். தேங்காய்களின் அளவைப் பொறுத்து ரூ. 15 முதல் ரூ. 26 வரை விலை நிர்ணயிக்கப்பட்டு, மொத்தம் ரூ. 16 லட்சத்திற்கு தேங்காய்கள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த சந்தைக்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி