தர்மபுரி: வார சந்தையில் மூன்று கோடிக்கு கால்நடைகள் விற்பனை

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் செவ்வாய் தோறும் நடைபெறும் வாரச்சந்தையில், பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று கூட்டம் அலைமோதியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆடுகள் ரூ. 3000 முதல் ரூ. 24,000 வரையிலும், மாடுகள் ரூ. 8,000 முதல் ரூ. 72,000 வரையிலும் விற்பனையாகின. மேலும், நாட்டுக் கோழிகளும் விற்பனைக்கு வந்தன. மொத்தத்தில், நேற்றைய சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி