தர்மபுரி: புளுதியூரில் 47 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

தர்மபுரி மாவட்டம் புளுதியூரில் புதன்கிழமை நடைபெற்ற கால்நடை வாரச்சந்தையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள், ஆடுகள் மற்றும் மாடுகளை வாங்கி விற்றனர். ஆடுகள் ரூ. 5,200 முதல் ரூ. 12,500 வரையிலும், மாடுகள் ரூ. 8,000 முதல் ரூ. 48,000 வரையிலும் விற்பனையாகின. நேற்று (பிப். 18) நடைபெற்ற இந்த சந்தையில் ஒட்டுமொத்தமாக ரூ. 47 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி