தர்மபுரி: காரிமங்கலத்தில் 1. 75 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடை சந்தையில் நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆடுகள், மாடுகள், நாட்டுக்கோழிகள் என மொத்தம் ரூ. 1.75 கோடிக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆடுகள் ரூ. 4000 முதல் ரூ. 23,000 வரையும், மாடுகள் ரூ. 8000 முதல் ரூ. 65,000 வரையும், நாட்டுக்கோழிகள் ரூ. 350 முதல் ரூ. 1400 வரையும் விற்பனையாகின.

தொடர்புடைய செய்தி