தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே சிட்லக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் (16) நேற்று முன்தினம் தனது தாயை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, பின்னால் வந்த வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார். இது குறித்து பாப்பாரப்பட்டி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.