தர்மபுரி: தருமபுரியில் பாஜக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

தர்மபுரி பாஜக அலுவலகம் முன்பு நேற்று மார்ச் 22 மாலை, பாஜக மாவட்ட பொறுப்பாளர் சரவணன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய மாவட்ட தலைவர் சரவணன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தமிழக மக்களை வஞ்சித்து வருவதாகவும், குறிப்பாக காவிரி நீர்பிரச்சினையில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. ஷிவகுமார் மற்றும் மருத்துவ கழிவுகளை தொடர்ந்து தமிழகத்தில் கொட்டி வரும் கேரள மாநிலத்தில் முதலமைச்சராக இருக்கும் பினராயி விஜயன் மற்றும் பஞ்சாப் முதல்வர்கள் பஞ்சாப் முதல்வரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றதை எதிர்த்தும், டாஸ்மாக் ஊழல் மற்றும் திமுகவின் அரசியல் நடவடிக்கைகளை கண்டித்து, தருமபுரியில் பாஜக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இன்று தமிழக முழுவதும் பாஜக நிர்வாகிகள் தங்கள் வீட்டுக்கு முன்பாக இந்த எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி