தர்மபுரி: கட்டிடம் இல்லாமல் கோயிலில் செயல்படும் அரசுப் பள்ளி

பி. செட்டிஹள்ளி ஊராட்சி ஜோதிஹள்ளி கிராமத்தில், 2016ல் நடுநிலைப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், போதுமான வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால் தொடக்கப்பள்ளிக்கு 2, உயர்நிலைப்பள்ளிக்கு 2 என மொத்தம் 4 வகுப்பறைகளில் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக கட்டிடங்கள் இல்லாததால் பள்ளியின் எதிரில் உள்ள மாரியம்மன் கோவிலில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இப்பிரச்சனையில் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி