தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவிப்பு

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி இன்று செப்டம்பர் 30 வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது, தற்காலிக உரிமம் பெற்று பட்டாசுக் கடை வைக்க கடைபிடிக்க வேண்டிய விதிமுறை களாவன, 2024-ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகை 31. 10. 2024 தேதியன்று கொண்டாடப்படவுள்ளது. அதன் பொருட்டு.

தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக்கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் வெடி பொருள் சட்டம் 1884 மற்றும் விதிகள் 2008 இன்கீழ் தற்காலிக பட்டாசுக் கடை வைக்க உரிமத்திற்கான விண்ணப்பங்களை https: //www. tnesevai. tn. gov. in/ என்ற இணைய முகவரியில் அல்லது இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தற்காலிக பட்டாசு கடைக்கான உரிமம் பெற 25. 10. 2024-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 25. 10. 2024-ஆம் தேதிக்கு பின்னர் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மற்றும் இணைய வழி அல்லாமல் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படாது. என மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி