அப்போது சந்தேகத்திற்குரியவாறு டூவீலரில் வந்த 2 பேரை பிடித்து, சோதனை செய்த போது அவர்களிடம் திமிங்கலத்தின் எச்சம் இருந்ததை தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் அவதானப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கரண்குமார் (24), கிருஷ்ணகிரி பழையபேட்டை அருந்ததி மாரியம்மன் கோயில் முதல் தெருவைச் சேர்ந்த முகமது பகாத் (23) என்பது தெரியவந்தது.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சத்தை பறிமுதல் செய்தனர்.