விஏஓ அதிரடி சஸ்பெண்ட்

தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா சிட்லிங் வி. ஏ. ஓ. , வாக பணிபுரிந்து வந்தவர் ராஜேந்தர். இவர், தொடர்ந்து ஒரு வாரமாக, உயரதிகாரிக ளுக்கு தகவல் அளிக்காமல், பணிக்கு வராமல் இருந்ததுடன், வருவாய் தீர்வாய கணக்குகளை முடித்து, இதுவரை ஆர். டி. ஓ. , ஒப்புதலுக்கு வைக்கவில்லை. மேலும், வருவாய் தீர்வா கத்தில், பொதுமக்களால் அளிக்கப்பட்ட மனுக் களின் மீது, நடவடிக்கை எடுக்காததுடன், கோட் டப்பட்டியில் நடந்த, 'மக்களுடன் முதல்வர்' சிறப்பு முகாமில் கலந்து கொள்ளாமல், தன் மொபைல்போனை தொடர்ந்து, 'சுவிட்ச் ஆப்' செய்து வைத்துள்ளார். பொதுமக்களுக்கும், வருவாய் நிர்வாகத்திற்கும் இவரது செயல்கள் ஏற்புடையதாக இல்லாததால், அவரை, 'சஸ்பெண்ட்' செய்து அரூர் ஆர். டி. ஓ. ,. வில்சன் ராஜசேகர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி