கடையடைப்பு போராட்டம்.. திமுக-பாமகவினர் இடையே வாக்குவாதம்

தர்மபுரி மாவட்டம் முழுவதும் இன்று (அக்டோபர் 4) பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டி நடந்த அரைநாள் கடைஅடைப்பு போராட்டத்தை எதிர்த்து பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தின் முன் வணிகர்களுக்கு ஆதரவாக திமுக பேரூர் செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் திமுகவினர் பாமக கட்சியை சார்ந்த முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி மற்றும் பாமக நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்ட நிலையில் இரு தரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி