மேலும் கலந்து கொண்டவர்களுக்கு ECG, ரத்த கொதிப்பு சர்க்கரை அளவு கொலஸ்ட்ரால் ரத்த அளவு கர்ப்பபை வாய் புற்றுநோய் பரிசோதனை சக்கரை நோய் நரம்பு தாக்க பரிசோதனை இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சை சிறுநீரக சிகிச்சை எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மகப்பேறு மற்றும் காது மூக்கு தொண்டை ஆகிய சிகிச்சைகளுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கினார்கள். இதில் கலந்து கொண்ட சிறப்பு மருத்துவர்கள், தினேஷ், சண்முகம், பிரபு, சீனிவாசன், பிரகதீஸ்வரன், கோகுல், அகல்யா, கார்த்திக், ரம்யா, சௌமியா, மீனாட்சி, மகேஸ்வரன், ஆகியோர் பங்கு பெற்றனர்.
இந்த முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதில் 750 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.