தர்மபுரி: கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே ராமியம்பட்டி பகுதியில் கோபிநாதம்பட்டி காவல் ஆய்வாளர் லட்சுமி மற்றும் காவலர்கள் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலை ஓரத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த அசோக் குமார் என்பவரை பிடித்து காவலர்கள் விசாரணை நடத்தினார்கள். அப்போது அசோக் குமார் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து காவலர்கள் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி