தர்மபுரி: கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காரிமங்கலம் காவல்துறையினர் வியாழக்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் குட்டூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது விக்னேஷ் என்பது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி