தர்மபுரி: சிறுமி பலாத்காரம் வழக்கு; தொழிலாளிக்கு 15 ஆண்டு சிறை

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதிக்கு உட்பட்ட விவசாயி துரை என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அரூர் காவல் நிலையத்தில் வைத்து புகார் அளித்தனர். 

அதன் பெயரில் அரூர் காவலர்கள் போக்சோ வழக்கு பதிவு செய்து துரையை கைது செய்து காவலில் அடைத்தனர். இது குறித்த வழக்கு நேற்று ஜனவரி 29 தர்மபுரி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில் துரை மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. அடுத்து துரைக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் 15,000 ரூபாய் அபராதமும் விதித்து தர்மபுரி போக்சோ நீதிமன்ற நீதிபதி சிவஞானம் தீர்ப்பு வழங்கினார்.

தொடர்புடைய செய்தி