தர்மபுரி: குடும்ப தகராறு காரணமாக பெண் தற்கொலை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோலைக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம் இவர் விவசாயம் செய்து வருகின்றார். இவரது மனைவி வேங்கம்மாள், இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் தங்களது விவசாய நிலத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பாக கடந்த சில தினங்களாக கணவன் மற்றும் மனைவி வேங்கம்மாள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் நேற்று (ஜூன் 14) மாலை வீட்டின் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் வேங்கம்மாள் தூக்கிலிட்டு தொங்கி நிலையில் சடலமாக இருந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த மதிக்கோன் பாளையம் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வேங்கம்மாளின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி