மொரப்பூர் ஒன்றியம் சிந்தல்பாடி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் ஆட்சியர் மற்றும் முதல்வரிடம் மனு அளித்தும் அவர்களுக்கு பட்டா வழங்காமல், வசதியுள்ளவர்களுக்கும் அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கும் வீட்டு மனை பட்டா வழங்குவதற்கு தற்போது வேலை நடந்து வருவதாகக் கூறி, தகுதியானவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும், இல்லையெனில் முதல்வரை சந்தித்து தர்ணாவில் ஈடுபடுவோம் என சிந்தல்பாடி பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் இன்று புதன்கிழமை மாலை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.