தர்மபுரி: மண் கடத்தல் வாகனங்களை கிராம மக்கள் முற்றுகை

கம்பைநல்லூர் கொங்கரப்பட்டி ஊராட்சியில் உள்ள அட்டகுட்ட பள்ளம் ஏரியில் இருந்து திமுக பிரமுகர் அன்பு, சில திமுக பிரமுகர்களின் உதவியுடன் கடந்த 15 நாட்களாக ஜேசிபி, டிப்பர் லாரி, டிராக்டர்கள் மூலம் கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இன்று காலை கிராம மக்கள் மண் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை முற்றுகையிட்டு, காவல்துறையினர் வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி