தர்மபுரி: பாப்பம்பாடி அண்ணாநகரைச் சேர்ந்த விக்னேஷ், வியாழக்கிழமை இரவு சாமியாபுரம் - அரூர் சாலையில் நண்பர் மணிகண்டனுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கணேசன் மற்றும் சந்திரன் ஆகியோர் வந்த மற்றொரு இருசக்கர வாகனத்துடன், நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் நால்வரும் கீழே விழுந்தனர். அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், விக்னேஷ் மற்றும் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரியவந்தது. இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.