குறிப்பாக சனிக்கிழமை நாட்களில் விசேஷ பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்று வரும் நிலையில், இன்று பிப்ரவரி 22 மாசி மாத சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு அதிகாலை முதலே ஆஞ்சநேயருக்கு முக்கிய திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. வெத்தலை மாலை மற்றும் வடமலை சாற்றப்பட்டு ஆஞ்சநேயருக்கு வழிபாடுகள் நடைபெற்ற நிலையில், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள் பாலித்தார்.
இதில் சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் காலை முதலே வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.