தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை சித்திரை மாத பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. குறிப்பாக குமாரசாமிப்பேட்டை சிவ ராம சுந்தரி ஆனந்த் நடராஜர் கோவில், தர்மபுரி ஹரிநாத சுவாமி கோவில், அனுசாகரம் சித்தலிங்கேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் ஆலயம், பூரிக்கல்கைலாசநாதர் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.