கடத்தூர் ஒன்றியம் அஸ்தகியூரில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மைய கட்டிடம் மற்றும் நத்தத மேட்டில் ரூ. 1.50 லட்சம் மதிப்பீட்டில் வாலிபால் மைதானத்தை பசுமை தாயக தலைவர் சௌமியா அன்புமணி நேற்று திங்கட்கிழமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி, மாவட்ட செயலாளர் அரசாங்கம் உள்ளிட்ட கட்சி முக்கிய நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். இந்த திறப்பு விழா அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.