தர்மபுரி: சௌமியா அன்புமணிக்கு உற்சாக வரவேற்பு

தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திப்பம்பட்டி பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி இல்லத் திருமண விழாவிற்கு கலந்து கொள்வதற்காக இன்று (ஜூன் 12) தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் பாமக வேட்பாளர் மற்றும் பசுமைத்தாயக தலைவர் முனைவர் சௌமியா அன்புமணிக்கு திப்பம்பட்டி பகுதியில் உற்சாகமான முறையில் தருமபுரி மாவட்ட பாட்டாளி நிர்வாகிகள் வரவேற்றனர். 

இதில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினரும் பாமக மேற்கு மாவட்ட செயலாளருமான எஸ் பி வெங்கடேஸ்வரன், மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா அரசாங்கம், கவுன்சிலர் சண்முகம் மற்றும் தர்மபுரி மாவட்ட பாமக வன்னியர் சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தினபலரும் கலந்து கொண்டு மேலதிக வாழ்த்துக்கள் முழங்கப்பட்டு பட்டாசுகள் வெடித்து சிறப்பான முறையில் வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி